Monday, March 3, 2014

நல்ல உள்ளம் உறங்காது

 இப்பூவுலகில் மனிதனாய்ப் பிறந்தவர்கள் பலர் , அன்றாட வாழ்க்கைக்கு பொருத்தமாக இலாத,   இந்த ஆன்மா பற்றிய சங்கதிகள், சொர்க்கம், நரகம் என்ற வாசகங்கள் பேத்தல் உடான்சு என்று சொல்கின்ற, நம்புகின்ற, அதையும் பிறர் நம்பும்படியாகச் செய்கின்ற  ,வேளையில்

வலை நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலையில் " நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் என்று ஏதேனும் உண்டா என்று கவலைப்பட்டு இருக்கிறார்.

இங்கு உள்ளது.
 http://tthamizhelango.blogspot.com/2014/03/blog-post.html#comment-form

சொர்க்கம் என்று இல்லை என வாதிடும் ஸ்டீபன் ஹாகிங் இங்கே

ஒரு நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனது சிந்தனைகளே பகிர்கிறார் இங்கே .
சொர்க்கம் இருக்கிறது போல் தான் தோன்றுகிறது. இவர் எண்ணங்களின் வலையிலே இங்கே 

இதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி தள்ளி விட்டு, ஸ்வர்க்கத்தில் செக்ஸ் இருக்கா இல்லையா ? என்பது பீடர் க்ரீப்ட் அவர்களின் தொலை நோக்கு பார்வை.   கிளிக்குங்கள்.

அவரவர் கவலை அவருக்கு.  எனது சிகாகோ நண்பருக்கு  புரியும்.ரசிப்பார் கூட. 

நமது ஹிந்து மதத்தின் உட்கருத்துக்கள் என்ன ?
இங்கே ராமகிருஷ்ண விவேகானந்த நிலையம் நியூ யார்க் சொல்வது இங்கே

நமது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் கருத்துப்படி அவ்வுலகம் என்று ஒன்று இருக்கிறது.

அருள் இலார்க்கு அவ்வுலகம்  இல்லை
 பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு

 எனும் வள்ளுவனின் வாக்கினை பலர் பல முறை படித்திருந்தாலும்,

அதற்கும் ஒரு படி மேலே சென்று,

பொருளற்றார் பூப்பர் ஒருகால்
அருளற்றார்  மற்றாதல் அரிது

எனும் எச்சரிக்கை தனையும் துச்சமாக நினைத்து,

பொருள் இல்லையேல் இந்தப்புவியில் இனிதான ஒரு வாழ்வு இல்லை என ஒரு முடிவு செய்து  அந்தப் பொருளை எப்படியாவது ஈட்டிட, அந்தப் பொருள் தரும் புகழ் தனை பெற்றிட எந்த ஒரு பாவச் செயலையும் செய்ய முற்படும் இவ்வுலகத்தில்,

சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் என்பதைப் பற்றி எல்லாம் சிந்தனை செய்ய நேரம் இல்லை, வந்தது வரட்டும் போடா என்று

இறுமாப்புடன் செயல் படும் இந்தக் காலத்தில்,

இதை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி விட்டு, தனது மனதிலே

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி கவலைப் படும் ஒரு நல்ல உள்ளத்தை பாராட்டாது இருக்க இயலாது.

வலை அன்பர் திரு தமிழ் இளங்கோ அவர்கட்கு,  இக்கருத்தை முன்வைத்தமை குறித்து பாராட்டுக்கள். எமது நன்றி.

ஒன்று கவனித்து இருக்கிறேன்.
 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது நாம் கேட்ட பாடல் ஒன்று. இன்னமும் இதயத்தில் இனிக்கிறது.

தஞ்சையில், நாங்கள் இருந்த தெருவில், இருந்த நாய் ஒன்று, நான் அலுவலகத்தில் இருந்து வரும் வரையில் அது என் வீட்டு வாசலில் இருந்து காவல் காத்து நிற்கும். அதன் பிறகு தான் அதற்கு போடப்பட்ட உணவை சாப்பிடும். அதைக் கண்டு வியந்து இருக்கிறேன்.



இக்கட்டுரையை படிக்கும்பொழுது இன்னொரு காணொளி கண்ணில் பட்டது.
அதையும் படியுங்கள். பாருங்கள்.



நாம் சொர்க்கத்துக்கு போவோமா, நரகத்துக்கு போவோமா என்று அந்த நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு நிமிடம் அந்த நாள் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்கே புரிந்து விடும்.

அதே சமயம், நம்மிடையே நன்றி உணர்வினை எடுத்து காட்டும் நாய்களுக்கும்,
வெய்யில், மழை என்று பாராது சேற்றிலே வயலிலே அயராது உழைக்கும்
மாடுகளுக்கும்,
தான் பெற்ற கன்றுகளை விட, நமக்கு குடம் குடமாகப் பால் தரும் பசுக்களுக்கும்

சொர்க்கம்
நிச்சயம்.

5 comments:

  1. /// ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு நிமிடம் அந்த நாள் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்கே புரிந்து விடும்... ///

    அருமை ஐயா... உண்மை...!

    ReplyDelete
  2. அன்புடையீர் வணக்கம்! உஙகள் தளத்தில் என்னுடைய பதிவைப் பற்றிய விமர்சனக் கருத்துரைகள் இருப்பதாக சூரி சிவா என்கிற சுப்பு தாத்தா ( http://subbuthatha72.blogspot.in ) அவர்கள் என்னுடைய பதிவினில் சொல்லி இருந்தார். என்னுடைய பதிவைப் பற்றிய தங்களது கருத்துரைகளுக்கு நன்றி!

    // நாம் சொர்க்கத்துக்கு போவோமா, நரகத்துக்கு போவோமா என்று அந்த நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு நிமிடம் அந்த நாள் என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்த்தாலே நமக்கே புரிந்து விடும்.//

    என்ற தங்கள் மேலான கருத்துரையை ஆமோதிக்கிறேன். சொர்க்கமும் நரகமும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. நன்றி!

    ReplyDelete
  3. சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள நெஞ்சுதான் என்றே பாடத் தோன்றுகிறது !
    காணொளி அருமை !

    ReplyDelete
  4. மனமது செம்மையானால்
    மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
    இது தீருமூலர் வாக்கு

    ReplyDelete