Tuesday, February 25, 2014

ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல்



பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’

காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது.

Paeco Underhill என்ற ஒரு மனோதத்துவ வல்லுநர் தனது அண்மையில் வெளியான ஒரு புத்தகத்தில் எழுதியவற்றை எனது அந்தக்கால நண்பர் திரு ராகவசாமி அவர்கள் ஒரு இ மெயிலில் அனுப்பி இருக்கிறார்கள்.

பேகோ அண்டர்ஹில் அவர்கள் என்ன துறை சார்ந்தவர்? அவர் ஆய்வுகள் எதை இலக்காக் கொண்டவை ? அவர் சாதனை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குக.

குறிப்பாக அவர் சொல்லுவதெல்லாம் இதுவே:

பெண்களைப் பற்றிய ஆண்களின் புரிதல் சரி இல்லை. ஒரு 20 பர சென்ட் கூட இவர்களுக்கு தத்தம் வீட்டுப் பெண்டிரைப் பற்றியே புரிதல் உகந்ததாக இல்லை.

அதே சமயம் ஆண்களைப் பற்றிய பெண்கள் புரிதல் 75 விழுக்காடுக்கு மேல் சரியாக இருக்கிறது. 


“பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’
என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர்.
 அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர்!’

என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்,
 We live in a world that is owned by men, designed by men, and managed by men – and yet we expect women to be active participants in it.”-- Paco Underhill
“வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார்.
இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். என்ன பிரச்னை வரும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும் 


2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?


3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.


4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.]

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.


பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
Sent from my Smartphone
by my old friend Sri K.Raghavasamy,Karaikkal.

இந்த மனோ தத்துவ நிபுணர் கூறியவற்றில் எது எது நீங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியது ?

 முதலில் உலகில் தமிழ் உலகில் ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகமான பெண் உரிமை, மற்றும் பெண்கள்  மன நலம் குறித்து பேசுபவர்கள் சமூக சிந்தனையாளர்கள் பார்வையாளர்கள் திருமதி ஓவியா, திருமதி டாக்டர் ஷாலினி போன்ற வர்களது கருத்துக்களை பார்ப்போம் என்று முதலில் நினைத்தேன்.

பிறகுதான் , அனுபவம் மிகவும் பெற்ற சக வலைப் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது தான் சாலச் சிறந்தது என்று தோன்றியது.

நமக்கு வேண்டியது ப்ரொபசனல் அட்வைஸ் அல்ல. யதார்த்த நிலை என்ன ?
என்பது தானே ?

எனக்கு அறிமுகமான பெண் பதிவாளர்கள் என்ன சொல்கிறார்கள்.?
 அவர்களது எக்ஸ்பர்ட்ஸ் ஒபினியன்ஸ் என்ன என்ன ?
இவர்களது பார்வையில் எழுதியவை படுமா என்று தெரியவில்லை.

+Ramalakshmi Rajan
+Ranjani Narayanan
+Geetha Sambasivam
+Thenammai Lakshmanan 
+Gomathy Arasu
+rajalakshmi paramasivam
+raji venkat
+பார்வதி இராமச்சந்திரன்.
+Mythily kasthuri rengan
+Mathangi Mathangi
+Gayathri S 
+Ananya Mahadevan
+Tulsi Gopal
+Susila Marees
+Shylaja Narayan
+revathy rkrishnan
+jayagowri suryanarayanan
+sudha narayanan
+priyadontics Deepapriya
+Priya Baskaran 
+Viji Ganesan
இந்த லிஸ்டில் விட்டுப்போயிருந்தாலும் நீங்கள் பின்னோட்டம் இடலாம். அல்லது எனது இ மெயில் க்கு கருத்துக்களை அனுப்பலாம்.


ஆண்களும் கருத்து சொல்லுங்கள். உங்கள் மனைவி என்ன நினைக்கிறாள் என்றும் சொல்லுங்கள். 

1 comment:

  1. 01. சரி... (அவர்களும்)
    02. கோபப்படாமல் கற்றுக் கொள்வார்கள்...
    03. அது போல் எண்ணமே இல்லை... சரிசமம்...
    04. ஆம்...
    05. கண்டிப்பாக...
    06. தொடர்வது தான் சிரமம்... ஒரு நாள் மாறும் / மாற்றப்பட்டு விடும் (!)
    07. அன்று தான் விசேஷமாக சமைப்பார்கள்...
    08. இல்லேவே இல்லை...
    09. தெரிந்தாலும் வேண்டாம் என்று சொல்வார்கள்...
    10. எப்போதும் உண்டு...
    11. இருவரும் புரிந்து கொண்டுள்ளோம்...
    12. சம்மதம்...
    13. உடனே கவனிப்போம்...
    14. அதே...
    15. உண்மை...
    16. சரி தான்...!
    17. உண்டு...
    18. அவர்களின் விருப்பம் நிறைவேறும்...
    19. எங்களுக்கு பொருந்தாத கருத்து...
    20. என்றும் கண்காணிப்பு உண்டு...
    21. அவர்களுக்கே தெரியும்...
    22. வருடம் இருமுறை...
    23. சொல்லவே வேண்டாம்... என்றும் சுத்தம் தான்...
    24. பொறுப்பு உண்டு...
    25. அதற்கு வாய்ப்பில்லை...

    ReplyDelete