Saturday, February 22, 2014

பாரதி கண்ட தமிழ்த் தாத்தா.

 எதுவுமே எவருமே அருகில் இருக்கையிலே அருமை தெரிவதில்லை.
அதை இழந்தபின்பு தான் அதன் அருமை தெரிகிறது.
அது போலவே, சான்றோர் பலர் அவர் தம் வாழ்நாளிலே அதிகம் போற்றப்படுவது இல்லை. அவரது சிறப்பும் ஆற்றிய பணியும் தொண்டும் அவர் உடலை நீத்து வெகு காலம் கழிந்தபின்பு தான் தெரிய வருகிறது.

பாரதி இதற்குத் தக்கதோர் சான்று.
அந்த பாரதி,  மீசை வச்ச முண்டாசுக்கவி,
தமிழ்த்தாத்தா என நாம் போற்றும் உ.வே.சுவாமிநாத அய்யர் பற்றி அழகான ஒரு பாடலை இயற்றி இருக்கிறார்கள்.

இப்பாடலை இன்று தான் நான் சதங்கா அவர்கள் வலையிலே பார்த்தேன்.
அதை எனது வலை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவேன் .

சதங்கா அவர்களுக்கு எமது நன்றி.
 (சதங்கா வலைக்குச் செல்ல மேலே கிளிக்கவும்)

நீங்கள் இனி படிப்பது சதங்காவின் எழுத்துக்கள்.
தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது.   ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம்.  பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே.  அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!!  ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.


நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
     இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
     குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
     காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
     இறப்பின்றி துலங்குவாயே.









உ.வே. சுவாமிநாத  ஐயரது வாழ்வே தமிழுக்கு அவர் செய்த தொண்டின் சரித்திரமாக விளங்குகிறது.  அவர் தம் ஆய்வுகளைப் பற்றி மேலும் அறிய  சொடுக்குக இங்கே.http://en.wikipedia.org/wiki/U._V._Swaminatha_Iyer

No comments:

Post a Comment